கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தகவல்களை ஆய்வு செய்தல்
- பொல்பிதிகம பிரதேச செயலகமானது 54 கிராம உத்தியோகப் பிரிவுகளை கொண்டது. மேலதிக தகவல்களுக்கு , கிராம உத்தியோகப் பிரிவுகளைப் பார்வையிடவும்.
வியாபார உரிமையாளர் வியாபார பதிவை மேற்கொள்ளவது எவ்வாறு?
- வர்த்தக உரிமையாளர் செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் வருதல் அவசியமாகும்.
- வருமான சான்றிதழ் ஒன்றை பெறுவது எவ்வாறு?
- வருமான சான்றிதழ் பெறுநரிடம் இருந்து கடிதம் ஒன்றை பெறல்.
- கிராம உத்தியோகத்தரின் அனுமதியுடன் வின்னப்ப படிவத்தை ஒழுங்கு முறைப்படி நிரப்பவும்.
- வருமானத்தை உறுதிப்படுத்தும் ஏனைய பத்திரங்கள்.
- தேசிய அடையாள அட்டை.
சமூக நலன்புரி பிரிவு
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ரூபா 20000/= பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவினை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
கர்ப்பகாலத்தில் சமூகமளித்த பிரதேச செயலகத்தில் பணி புரியும், முன் குழந்தை பராமரிப்பு அபிவிருத்தி அதிகாரி, அல்லது மூன்று மாதங்களின் பின் களந்து கொண்ட அமர்வின் பொறுபதிகாரியிடமிருந்து பெற்று கொண்ட படிவம்.
கல்விசார் உதவிகளை பெற்றுக கொள்ளக் கூடியவர் யாவர்?
- பாடசாலை செல்லும் பிள்ளையின் , தந்தையை இழந்திருந்தால், அல்லது முற்றாக அஙகவீனற்முற்றிருந்தால், கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
உதவி சங்கம் ஒன்றினை எவ்வாறு பதிவு செய்வது ?
- உதவி சங்கமானது ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின் பதிவு செய்யப்படும்.
- பிரதேச செயலகத்தின் சமூக நலன்புரி பிரிவிலிருந்து படிவம், மற்றும் ஏனைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.t.
சமூர்த்தி நன்மைகள் கிடைக்கப் பெறுமா?
- தற்போது,புதிய பயனாளர்கள் தேர்நததெடுக்கப்படுவதில்லை. மற்றும் முறையீடுகள் எதிர்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
முதியோருக்கான உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான தகிதியுடையோர் யாவர் ?
- விண்ணப்பித்த நாளிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்டிருத்தல்.
- குடும்ப வருமானம் ரூபா 3000/= இற்கும் குறைவாக இருத்தல்.
- கணவன் அல்லது மனைவி (ஒருவருக்கு) விண்ணப்பிக்லாம்.
முதியோருக்கான அடையாள அட்டையை பெறுவது எவ்வாறு?
- கிராம உத்தியோகத்தர், அல்லது பரதேச செயலகத்திலிருந்து படிவத்தை பெற்று கொள்ளல்.
- பின், படிவத்தை பூரணப்படுத்தி உமது புகைப்படத்துடன் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்கவும்.
- பின் பிரதேச செயலகத்தில் மதியோர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரியிடமிருந்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
அனர்த்த நிவாரணம், மற்றும் ஏனைய உதவிகளை பெறுவது?
- தேவையான தகவல்கள், மற்றும் படிவத்தினை கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தின் சமூக நலன்புரி அதிகாரியிடமிருந்து பெநற்றுக் கொள்ளலாம்.
- துல்லியமாக படிவத்தை நிரப்பி மருத்துவ அறிக்கையுடன் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்கவும்.
- புற்றுநோய், மற்றும் சிறு நீரக ,மற்றும் ஏனைய நோய்கள்,அங்கவீனமுற்றவர்கள் பண உதவி கோரலாம்.
பதிவாளர் பிரிவு
பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஒன்றினை அல்லது அதன் பிரதியை பெற்றுக் கொள்வது எவ்வாறு?
- பிறந்த திகதி, திருமண நாள்,இறந்த திகதி மற்றும், சான்றிதழ் இலக்கத்தினை நீங்கள் அறிந்திருந்தால், ரூபா 100/= இனை பரதேச செயலகததில் செலுத்தி சான்றிதழ் அலலது அதன் பிரதியை பெற்றுக் கொள்ளலாம்.
- பிறந்த திகதி,திருமண நாள், இறந்த திகதி தெரியாவிடின் ரூபா 200/= இனை பரதேச செயலகத்தில் செலுத்தி சான்றிதழ் பிரதியினைப் பெற்றுக் கொள்ளலாம்
பிறப்பு ஒன்றினை பதிவு செய்வது எவ்வாறு?
- சாதாரன பிறப்பு ஒன்றானது 3 மாத காலத்தில் பதிவு செய்யப்படல் வேணடும். உமது பிரதேச பதிவாளரை சந்தித்து ( பிறந்த உரிய பிரதேசத்தில்) பதினை மேற்கொள்ளலாம்.
- பிறப்பு 3 மாத காலம் கடந்த பின்னராயின்,உமது பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்டப் பதிவாளரை (பிறந்த உரிய பிரதேசத்தில்) சந்தித்து பதிவினை மேற்கொள்ளவும்.



















